உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்லுாரி முன் நிறுத்தியிருந்த 2 டூவீலரை திருடியவர் கைது

கல்லுாரி முன் நிறுத்தியிருந்த 2 டூவீலரை திருடியவர் கைது

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, உப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம், 19; வட்டமலை பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த, 18ல், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' டூவீலரை கல்லுாரிக்கு வெளியில் நிறுத்தியிருந்தார். மீண்டும் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை.இதேபோல், ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியை சேர்ந்தவர் துளசிமணி, 64; இவர், 'டி.வி.எஸ்., ஹெவி டூட்டி' டூவீலரை, அதே கல்லுாரி முன் நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இந்த இரண்டு புகார் குறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். அதில், திருப்பூர் மாவட்டம், பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்த வேணுகோபால், 58, என்பவர் டூவீலரை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செயதனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை