உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் அரவிந்த் மருத்துவமனையில் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

நாமக்கல் அரவிந்த் மருத்துவமனையில் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

நாமக்கல்: நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில், அரவிந்த் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, முற்றிலும் கதிர்வீச்சு முறையில் முழுமையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, '4கே' தொழில் நுட்பம் மூலம் மிக துல்லியமான ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 'ஏஐ' ரோபோட்டிக்' அறுவை சிகிச்சை மற்றும் '4கே' ஆர்த்தோஸ்கோபி என்ற நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை துவக்க விழா, நாமக்கல் - பரமத்தி சாலை ஐஸ்வர்யா மகாலில், நேற்று நடந்தது.அரவிந்த் மருத்துவமனை இயக்குனர்கள் மணி, சிவக்குமார், தனபாக்கியம், சுசித்ரா, திவ்யா ராஜேஸ் ஆகியோர் வரவேற்றனர். இந்த புதிய அறுவை சிகிச்சை மையங்களை, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, நாமக்கல் நகராட்சி சேர்மன் கலாநிதி, டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள், அரவிந்த் மருத்துமவனை நிர்வாக ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை