உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / "ஃபாஸ்ட் டிராக் பட்டா மாறுதல் வருவாய்துறை அமைச்சர் தகவல்

"ஃபாஸ்ட் டிராக் பட்டா மாறுதல் வருவாய்துறை அமைச்சர் தகவல்

திருச்செங்கோடு: ''பட்டா மாறுதலுக்காக மக்கள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கும் வகையில், 'ஃபாஸ்ட் டிராக்' பட்டா மாறுதல் என்ற புதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது,'' என, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அரசு அறிவித்துள்ள விரைவு பட்டா மாறுதல் பணிகளை வி.ஏ.ஓ.,க்கள். ஆர்.ஐ.,க்கள், மண்டல துணை தாசில்தார், நில அளவை துறையினர் சரியாக செய்கின்றனரா என்பது குறித்து ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது, ''பட்டா மாறுதலுக்காக, மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுவது தடுக்கும் வகையில், ஃபாஸ்ட் டிராக் பட்டா மாறுதல் என்ற புதிய திட்டத்தை, அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் வி.ஏ.ஓ.,விடம் அளிக்கப்படும் பட்டா மாறுதல் சான்றுகளை, அதிகாரிகள் பெற்று அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் கள ஆய்வு செய்து பட்டாமாறுதல், தனிப்பட்டா போன்றவற்றை வழங்க வேண்டும்,'' என, அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தாசில்தார் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர். இந்நிலையில், தாலுகா அலுவலகத்தில், எந்த நேரமும் செக்ஷன் கிளார்க்குள் பணியில் இருப்பர். அமைச்சர் வர உள்ளார் என்ற தகவல் கிடைத்ததும் செக்ஷன் கிளார்க்குகள் மாயமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ