உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்பனை இருவர் கைது

லாட்டரி விற்பனை இருவர் கைது

குமாரபாளையம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இருவரை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரபாளையம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் போலீஸார் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, ஆனங்கூர் பிரிவு சாலையில் இருவர் லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், நாராயண நகரைச் சேர்ந்த செந்தில் (30), ஓலப்பாளையத்தை சேர்ந்த சக்தி (25) எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி