நாமக்கல்: அரசு உத்தரவின் பேரில், மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பாடங்கள், ஆசிரியர்களால் கருப்பு மையினால் நன்கு கருமையாக்கி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு உத்தரவின் பேரில், சமச்சீர் கல்வி புத்தகம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுலகம் மூலம், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடோனில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள், சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
புத்தகம், மாணவ, மாணவியருக்கு வினியோகப்பதற்கு முன், அதில் உள்ள குறிப்பிட்ட சில பாடங்களை கருப்பு மையினால் நன்கு கருமையாக்கப்பட்டு, பின், மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியருக்கு வழங்கப்பட உள்ள சமச்சீர் கல்வி புத்தகத்தில், அரசு உத்தரவின் பேரில் குறிப்பிட்ட சில பாடங்களை கருப்பு மையினால், கருமையாக்கி வருகின்றனர். இதுபோல், அனைத்து பள்ளி ஆசிரியர்களும், அரசு உத்தரவின் பேரில், குறிப்பிட்ட பாடங்களை கருமையாக்கி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.