உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரெங்கேஸ்வரர் கல்லூரி 3ம் ஆண்டு பி.எட்., வகுப்பு துவக்கம்

ரெங்கேஸ்வரர் கல்லூரி 3ம் ஆண்டு பி.எட்., வகுப்பு துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டி ஸ்ரீ ரெங்கேஸ்வரர் கல்வியியல் கல்லூரியில், மூன்றாமாண்டு பி.எட்., வகுப்பு துவக்க விழா நடந்தது. விழாவுக்கு, பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் அரங்கசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் பிரபாகரன், இணைச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாராயணமூர்த்தி, முதுகலை ஆசிரியர் அன்பழகி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ