உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுரபி பாலிடெக்னிக் கல்லூரி தேசிய கருத்தரங்கு துவக்கம்

சுரபி பாலிடெக்னிக் கல்லூரி தேசிய கருத்தரங்கு துவக்கம்

நாமக்கல்: புதுடில்லியில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் நாமக்கல் சுரபி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், தேசிய அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்கும் திறன் மேம்பாட்டு முகாம், இன்று (ஆக., 22) துவங்குகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் விழாவுக்கு, சென்னை என்.ஐ.டி.டி.ஆர்., முன்னாள் இயக்குனர் பார்கி தலைமை வகிக்கிறார். பேராசிரியர் நடராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகிறார். செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்கும் முகாமில், பேராசிரியர்கள் அனந்த பத்மநாபன், ஸ்ரீநாத், பிரகதீஸ்வரன், ராம்கணேஷ், அசோகன், கவுசிக், சிவக்குமார், கங்கையம்மன் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த நிபுணர்கள் தினமும் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனர். ஏற்பாடுகளை சுரபி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோபுமாதவன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை