உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மீன் திருட முயற்சி வாலிபர் கைது

மீன் திருட முயற்சி வாலிபர் கைது

குமாரபாளையம்: மீன் பண்ணையில் புகுந்து மீன் திருட முயற்சித்த வாலிபரை, குமாரபாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாராபாளையம் அருகே குப்பாண்டிக்காட்டில், காவிரி ஆற்றங்கரை ஓரம் ராஜேந்திரன என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணை உள்ளது. அந்த பண்ணையில், நேற்று அதிகாலை 5 மணியளவில், வாலிபர் ஒருவர் புகுந்து மீன்களை திருட முயற்சித்துள்ளார். அப்போது, அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த மீன் பண்ணை உரிமையாளர் ராஜேந்திரன், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்துள்ளார். அதில், குப்பாண்டிக்காடை சேர்ந்த மாதேஸ்வரன் (22) என்பது தெரியவந்தது. அவரை, குமாரபாளையம் போலீஸில் ஒப்படைத்தார். வாலிபரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை