உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இரண்டு நாளுக்கு முன் தி.மு.க.,வில் இணைந்தவருக்கு கவுன்சிலர் "சீட்

இரண்டு நாளுக்கு முன் தி.மு.க.,வில் இணைந்தவருக்கு கவுன்சிலர் "சீட்

நாமக்கல்: மாற்றுக்கட்சியில் இருந்து, முதல் நாள் தி.மு.க., வில் இணைந்தவருக்கு, அடுத்த நாள், நகராட்சி தேர்தலில் கவுன்சிலராக போட்டியிட 'சீட்' ஒதுக்கியுள்ளதால், அக்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ராசிபுரம் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. அதில், சேர்மன் பதவிக்கு தி.மு.க., சார்பில் நகராட்சி துணைத் தலைவர் அரங்கசாமி போட்டியிடுகிறார். நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும், தி.மு.க., சார்பில், கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், 15வது வார்டுக்கு வெங்கடாஜலம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், வெங்கடாஜலம் வேட்பாளர் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் அக்கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு 'சீட்' ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கட்சியின் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அந்த வார்டில் போட்டியிட, நகர துணைச் செயலாளர் பழனியப்பன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் விருப்ப மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகரச் செயலாளர் ராமதாஸ், அவரது இரண்டு மகன்களும் நகராட்சி சேர்மன் பதவிக்கோ, கவுன்சிலர் பதவிக்கோ வேட்பாளர்களாக இடம்பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை