சேந்தமங்கலம்: பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த வாலிபர், ஐந்து லட்சத்து
65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் திருடிச் சென்ற சம்பவம் குறித்து,
பேளுக்குறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.சேந்தமங்கலம் அடுத்த
போடிநாயக்கன்பட்டி, கட்டப்புள்ளிக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (54).
அவரது மனைவி விஜயலட்சமி (45). தோட்டத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு,
சாவியை அருகில் மாட்டிச் செல்வது வழக்கம்.அதேபோல், நேற்று காலை 9 மணிக்கு,
விஜயலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு, அருகில் மாடு மேய்க்க
சென்றுவிட்டார். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஆட்டோவில்
வந்துள்ளார். வீட்டுக்குள் சென்ற வாலிபர், பீரோவில் இருந்த, 25 பவுன் தங்க
நகையும், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும், 5,000 ரூபாய் மதிப்புள்ள
மொபைல் ஃபோனையும் திருடிச் சென்றார்.ஆள் நடமாட்டத்தை கண்ட விஜயலட்சுமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது,
வாலிபர் வெளியே கிளம்புவதற்காக தயாராக இருந்துள்ளார். அவரிடம் விபரம்
கேட்டபோது, பதில் கூறாமல், அங்கிருந்து நழுவிச்
சென்றுவிட்டார்.சந்தேகமடைந்த விஜயலட்சுமி, வீட்டுக்குள் சென்று
பார்த்தபோது, பீரோவில் இருந்த, 25 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம்,
5,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் ஃபோன் ஆகியவை திருடப்பட்டிருந்தது
தெரியவந்தது.இது குறித்து விஜயலட்சுமி, பேளுக்குறிச்சி போலீஸில் புகார்
செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்மநபர் குறித்து தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.