உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 14ல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதல்வரால் திறப்பு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

14ல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதல்வரால் திறப்பு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்

நாமக்கல்: ''தமிழகத்தில், 33 ஆண்டுகளுக்கு பின், புதிய மத்-திய கூட்டுறவு வங்கியாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை, வரும், 14ல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்,'' என, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கூறினார்.இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழக முதல்வர் நடவடிக்கையால், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு, கடந்த, 2024 முதல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்-டது. அகில இந்திய அளவில், மொத்தம், 351 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி, 352வது வங்கியாக உருவாக்கப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து, நாமக்கல் - மோகனுார் சாலையில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டு-றவு வங்கி தலைமை அலுவலகம் அமைக்கப்-பட்டு, மேலாண் இயக்குனர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கிக்கு, டிபாஸிட்கள் மற்றும் கடன்கள் உள்-ளிட்ட, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், மாவட்டம் முழுவதும், 30 கிளைகள் இயங்கும்.இந்த கிளைகள் மூலம், 165 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 393 பால் உற்பத்தியா-ளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 5 கூட்டுறவு நகர வங்கிகள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 26 பணியா-ளர்கள் கூட்டுறவு சங்கங்கள் என, மொத்தம், 746 கூட்டுறவு அமைப்புகளுக்கு இந்த வங்கி கிளை-களில் வங்கி சம்பந்தமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும்.நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழா, வரும், 14 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. சென்னையில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்கியை திறந்து வைக்கிறார். துணை முதல்வர் உதயநிதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செய-லாளர் முருகானந்தம் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை