உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலூர் காவிரி ஆற்றில்பொதுமக்கள் புனித நீராடல்

ப.வேலூர் காவிரி ஆற்றில்பொதுமக்கள் புனித நீராடல்

ப.வேலூர்: ஆடிப்பண்டிகை முன்னிட்டு, ப.வேலூர் காவிரி ஆற்றில் ஏராமானோர் நீராடி ஸ்வாமி வழிபாடு நடத்தினர்.ப.வேலூர் காவேரி ஆற்றில், ஆண்டுதோறும் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் காவிரி ஆற்றில் நீராடி ஸ்வாமி வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின், ஆற்றில் நீராடி ஸ்வாமியை வழிபட்டனர். மேலும், நேர்த்திக் கடனாக தலையில் தேங்காய் உடைத்தல், அரிவாள் மீது ஏறி நிற்பது உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது.மாலை 6 மணிக்கு மேல் ப.வேலூர் சிவன் கோவிலில் வாழை மட்டையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தை கோவில் அட்சகர்கள் ஆற்றின் நடுப்பகுதியில் சென்று விட்டனர். அந்த தீபம் கண்ணுக்கு எட்டியவரை அணையாமல் சென்றது.அந்த தீபத்தை வழிபட்டால், அடுத்த ஆண்டுக்குள் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதன்படி மோட்ச தீபத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி