உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் கணவன், மனைவிமகள் சாவு: கிராம மக்கள் சோகம்

விபத்தில் கணவன், மனைவிமகள் சாவு: கிராம மக்கள் சோகம்

ப.வேலூர்: ப.வேலூர் ஆற்றுப் பாலத்தில், கடந்த 4ம் தேதி நடந்த சாலை விபத்தில் அடுத்தடுத்த நாட்களில் மனைவி, கணவர், மகள் ஆகிய மூவரும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கரூர் மாவட்டம், காகிதபுரம் கொங்கு நகரைச் சேர்ந்தவர் விவசாயி சாமியப்பன் (48). அவர், கடந்த 4ம் தேதி ப.வேலூரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மனைவி மணி (45), வளர்ப்பு மகள் ராஜேஸ்வரி (6) ஆகியோருடன் டி.வி.எஸ்., 50 வண்டியில் சென்று கொண்டிருந்தார்.ப.வேலூர் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற ஜீப், சாமியப்பன் டி.வி.எஸ்., 50 மீது மோதியது. அந்த விபத்தில், முதலில் மணி, அதற்கடுத்த நாளில் சாமியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர்.திண்டுக்கல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமியப்பன் தம்பதியினர் வளர்ப்பு மகள் சிறுமி ராஜேஸ்வரியும் நேற்று உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ப.வேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், காகித புரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை