உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / "ஆட்டோ மொபைல் கருத்தரங்கம்

"ஆட்டோ மொபைல் கருத்தரங்கம்

ராசிபுரம்: ராசிபுரம், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, ஆட்டோ மொபைல் துறை சார்பில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கனரக வாகனங்களுக்கு பாடி கட்டுதல் குறித்து கருத்தரங்கு நடந்தது.கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ மொபைல் துறை விரிவுரையாளர் சாமிவேல் வரவேற்றார். துறைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஷியாம் கோச் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ஷியாம் சந்துரு பங்கேற்று, கனரக வாகனங்களுக்கு பாடி கட்டுதல் குறித்தும், பராமரிப்பது, விரைவாக பணி முடித்தல் பற்றியும் விளக்கினார்.தொடர்ந்து, கடந்த ஏப்ரல் வாரியத் தேர்வில், 600க்கு, 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆட்டோ மொபைல் துறை விரிவுரையாளர் போஜராஜன், கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை