உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநில கபடி போட்டியில்வெற்றி விநாயகா சாதனை

மாநில கபடி போட்டியில்வெற்றி விநாயகா சாதனை

மோகனூர்: மாநில அளவிலான கபடி போட்டிக்கு, தோளூர்பட்டி வெற்றி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மண்டல அளவிலான, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கபாடி போட்டி, திருச்சி எஸ்.எஸ்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. போட்டியில், மண்டல அளவில் இருந்து, 42 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில், தோளூர்பட்டி வெற்றி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.வெற்றி பெற்ற அணி, சேலத்தில் நடக்கும் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை, கல்வி நிறுவன தலைவர் சேகர், தாளாளர் சுப்ரமணி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சரவணகுமார், இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ராஜூ, உடற்கல்வி இயக்குனர்கள் மகேந்திரன், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ