உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 150 மாணவர் பங்கேற்புமாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

150 மாணவர் பங்கேற்புமாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

நாமக்கல்: மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, நாமக்கல்லில் நடந்தது.நான்கு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில், ஆறு வயது முதல், 16 வயது வரை, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியை, நாமக்கல் கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளி தாளாளர் சரவணன் துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.சங்க இணைச் செயலாளர் மணிரஞ்சன் வரவேற்றார். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி, மனவளக்கலை அறக்கட்டறை தலைவர் தங்கவேல், என்.எஸ்.ஆர்., மால் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அக்டோபர் மாதம், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்பர். தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் அசோசியேஷன் உறுப்பினர்கள் ராஜசேகர், நளினி ஆகியோர் போட்டியை நடத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை சங்க செயலாளர் அருள்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ