| ADDED : செப் 22, 2011 02:28 AM
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே, மாணவியரிடம் சில்மிஷம் செய்த
ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்செங்கோடு
தோக்கவாடி நெசவாளர் காலனியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது.
அந்தப் பள்ளியில், 36 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பள்ளி
ஓராசிரியர் பள்ளி. பள்ளியின் தலைமையாசிரியை செல்வி விடுப்பில்
சென்றுள்ளார்.அதனால், விட்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்
மாணிக்கம், தற்காலிக பணியாக தோக்கவாடி நெசவாளர் காலனி பள்ளிக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளார். அவர், நேற்று முன்தினம் பள்ளியில் 5ம் வகுப்பு
படிக்கும் வர்ஷினி (10), 2ம் வகுப்பு படிக்கும் கார்த்திகா (7) ஆகியோரிடம்
சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.அதை, தனது மொபைல் ஃபோனிலும் படம் பிடித்து
வைத்துள்ளார். அதைப் பார்த்த மற்ற மாணவியர், ஆசிரியர் மாணிக்கத்தின்
நடவடிக்கை குறித்து, பெற்றோõரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த
பெற்றோர், நேற்று காலை 9 மணியளவில் குழந்தைகளுடன் பள்ளியை
முற்றுகையிட்டனர்.மேலும், ஆசிரியர் மாணிக்கத்தை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கல்வித்துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் சம்மந்தப்பட்ட இடத்துக்கு
வரவில்லை. அதுதொடர்பாக மாணவ, மாணவியர் பெற்றோர் திருச்செங்கோடு டவுன்
போலீஸில் புகார் செய்தனர். மேலும், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு குறித்து,
திருச்செங்கோடு உதவி தொடக்க கல்வி அலுவலர் கவுரியிடமும் புகார்
செய்யப்பட்டது. புகாரின் மீது உதவி தொடக்க கல்வி அலுவலர் விசாரணை நடத்தி
வருகிறார்.