உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக ஓசோன் தினம்விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம்விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்:வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, கட்டுரை, ஓவியப் போட்டி நடந்தது.பள்ளித் தலைமையாசிரியர் செல்லமுத்து தலைமை வகித்தார். வேலகவுண்டம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., விநாயகம் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது. கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவை நடந்தது. அதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர் சண்முகம், முதுகலை தாவரவியல் ஆசிரியர் அப்துல்வஹாப் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ