நாமக்கல்: 'விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி வார்டுகளுக்கு, இட ஒதுக்கீடு
செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
செய்ப்பட்டுள்ளது' என, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.நாமக்கல் நகராட்சி எல்லை விரிவாக்கம்
செய்யப்பட்டதையடுத்து, வார்டு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கொண்டிசெட்டிப்பட்டி, கொசம்பட்டி, முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி,
நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, காவேட்டிப்பட்டி ஆகிய
ஒன்பது பஞ்சாயத்துகள் நகராட்சியுடன் இணைந்துள்ளன.அதையடுத்து, நகராட்சி
வார்டு எல்லைகள் சீரமைப்பு செய்து, தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.
விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளுக்கான இட ஒதுக்கீடும் இறுதி
செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு நகராட்சிக்கு
அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலச்சந்திரன்
தெரிவித்தாவது:நகராட்சி சேர்மன் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மேலும், நகராட்சியின், 30, 17, 28, 13, 8, 3, 27, 1,
19, 26, 9 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. 12, 23வது வார்டு பெண்கள் (எஸ்.சி.,) பிரிவினருக்கும்,
21, 33, 37, 22 ஆகிய வார்டுகள் எஸ்.சி., பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வார்டுகள் பொதுவார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடக்க உள்ளது.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.