உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலூர் டவுன் பஞ்.,அ.தி.மு.க., வேட்பாளர் மீதுமூத்த நிர்வாகிகள் அதிருப்தி

ப.வேலூர் டவுன் பஞ்.,அ.தி.மு.க., வேட்பாளர் மீதுமூத்த நிர்வாகிகள் அதிருப்தி

ப.வேலூர்: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து, பேரூர் செயலாளர் அ.தி.மு.க., சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து, அ.தி.மு.க., சேர்மன் வேட்பாளராக பொன்னிவேலு (எ) வேலுச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், பேரூர் செயலாளராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2001ம் ஆண்டு டவுன் பஞ்சாயத்து, 14வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொன்னிவேலு போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.பின், 2006ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் ஐக்கியமாகி, பேரூர் செயலாளர் பதவியை பிடித்தார். மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர் சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, அக்கட்சியில் சீட் கேட்ட மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றி கட்சித் தலைமைக்கு புகார் மனு அனுப்பவும் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை