உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

ராசிபுரம்: தமிழ்நாடு முதுகலை கணித பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், ராசிபுரம் வெற்றி விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.வெற்றி விகாஸ் கல்வி நிறுவனர் குணசேகரன் தலைமை வகித்தார். சங்க மாநிலத்தலைவர் விஜயகுமார் வரவேற்றார். ஞானமணி கல்வி நிறுவனத் தலைவர் அரங்கண்ணல் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், தேர்வின் போது கணித பாடத்தில் மாணவர்கள் பதட்டமும் கிராமப்புற மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளாத நிலையும் உள்ளது. அதனால், கணித பாடத்திற்கும், 50 மதிப்பெண் செய்முறை தேர்வு கொண்டு வர வேண்டும். மற்ற பாடத்திட்டங்களுக்கு, 140 பாடவேலையை போல கணித பாடதிட்டத்திற்கும், 140 பாடவேலை நாளாக குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிøவேற்றப்பட்டது.முன்னதாக, மாதிரி செய்முறை பதிவேட்டினை ஞானமணி கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் வெளியிட, வெற்றி விகாஸ் கல்வி நிறுவனர் குணசேகரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், சங்க மாநில புரவலரும், எஸ்.ஆர்.வி., பெண்கள் பள்ளியின் இயக்குனருமான மனோகரன், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த கணித ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Parthasarathy Badrinarayanan
செப் 09, 2025 17:29

கிரிமினல்கள் இருக்கும் வழியில் ஊர்வலம் போகலாமா? கல் வீசிய கிரிமினல்களின் கைக்கூலி போலீஸ்


சிந்தனை
செப் 09, 2025 15:59

ஹிந்து பக்தர்களை தாக்கிய திராவிடர்கள் சீக்கிரமா தமிழ்நாட்டு திராவிடர்களும் ஆரம்பிப்பார்கள்


subramanian
செப் 09, 2025 11:44

காங்கிரஸ் தேசவிரோத கட்சி ஆகிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை