உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்.,12 தபால்தலை சேகரிப்பு தினம் கொண்டாட்டம்

அக்.,12 தபால்தலை சேகரிப்பு தினம் கொண்டாட்டம்

நாமக்கல்: 'தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, அக்டோபர் 12ம் தேதி, தபால் தலை சேகரிப்பு தினம் கொண்டாப்படுகிறது' என, நாமக்கல் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தேசிய அஞ்சல் வார விழா, ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை கொண்டாப்படுகிறது. அதுபோல், இந்தாண்டும் தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடக்க உள்ளது.அதன்படி, தொழில் துறையினர், அனைத்து அரசு, அரசு சார்ந்த பணியாளர்கள், அலுவலர்கள், மக்கள் மற்றும் மாணவர்களுக்கு அஞ்சல் துறை வழங்கி வரும் பல்வேறு சேவை குறித்து அறிய, ஒவ்வொரு நாளும் சிறப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 12ம் தேதி, தபால் தலை சேகரிப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. மாணவர்கள் மத்தியில் தபால் தலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை அஞ்சலக மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளி மணவர்களுக்கு, வினாடி வினா மற்றும் ஓவியம் தீட்டும் போட்டி, அக்டோபர் 12ம் தேதி, கோவையில் நடக்கிறது.போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், மாணவர்கள், 0422-2305100, 2305200 என்ற ஃபோனில் தொடர்பு கொண்டு தபால்களை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி