உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் நகராட்சியில்கட்சியினர் வேட்புமனு

ராசிபுரம் நகராட்சியில்கட்சியினர் வேட்புமனு

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று துணை சபாநாயகர் தனபால் தலைமையில், நகராட்சி தேர்தல் அதிகாரி தனலட்சுமியிடம், மனு தாக்கல் செய்தார். மேலும், 27 வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்களும், அந்தந்த உதவி தேர்தல் அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்தனர்.மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் மகாலிங்கம், நகர பொருளாளர் ராமசாமி, துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதிகள் கோபால், கந்தசாமி, அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.* தே.மு.தி.க., சார்பில், நகராட்சி சேர்மன் பதவிக்கு, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் தர்மராஜா போட்டியிடுகிறார். அவர், நேற்று நகர செயலாளர் இளையராஜா தலைமையில், தேர்தல் அதிகாரி தனலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.மேலும், 27 வார்டு கவுன்சிலர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நிகழ்ச்சியில், நகர அவைத் தலைவர் செங்குட்டுவன், துணைச் செயலாளர் மாயக்கிருஷ்ணன், கனகராஜ், நகர இளைஞரணி தலைவர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை