உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் கட்ட தனியார் நிலம் ஆக்கிரமிப்பு8 பேர் கைது: போலீஸ் விசாரணை

கோவில் கட்ட தனியார் நிலம் ஆக்கிரமிப்பு8 பேர் கைது: போலீஸ் விசாரணை

ப.வேலூர்: ப.வேலூர் அருகே தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட முயற்சித்த எட்டு பேரை, நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.ப.வேலூர்-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில், கொளங்காட்டுப்புதூரில் மலையாளத்தான் கோவில் அமைந்துள்ளது. சாலையோரம் அமைந்திருந்த கோவிலை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். அதையடுத்து, சாலையில் இருந்து சிறிது தூரத்தில் கோவில் அமைக்க, அப்பகுதி மக்கள் முடிவு செய்து, இடம் தேர்வு செய்தனர்.இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர், கோவில் கட்டுவதற்கு தேர்வு செய்த ஐந்து செண்ட் இடம், தனக்கு சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இருமுறை சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும், அந்த இடம் தனக்கு சொந்தமானது என்பதில் விடாப்பிடியாக இருந்த சுப்ரமணி, அதுதொடர்பாக பரமத்தி தாலுகா அலுவலகத்தில் புகார் செய்தார்.அதையடுத்து, பரமத்தி சர்வேயர் மூலம் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்ட இடம் அளவீடு செய்யப்பட்டது. அதில், சம்மந்தப்பட்ட இடம், சுப்ரமணிக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. நாமக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்வேயர் அளவீடு செய்ததிலும், சுப்ரமணி நிலம் என்பது உறுதி செய்யப்பட்டது.எனினும் கிராம மக்கள் தொடர் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து சுப்ரமணி, நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார், கொளங்காட்டுப்புதூர் கிராமத்தை சேர்ந்த சேரன், சக்தி, பாலுசாமி, பொன்னுசாமி, முருகேசன், பாலு, விஸ்வநாதன், பழனிசாமி ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர்.கோவில் கட்ட வலியுறுத்தியதற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பது, கிராம மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை