உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய சாலை பாதுகாப்பு மாதம் போக்குவரத்து துறை விழிப்புணர்வு

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் போக்குவரத்து துறை விழிப்புணர்வு

நாமக்கல்,: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் போக்குவரத்து அலுவலர்கள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜன., 15 முதல் பிப்., 14 வரை தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியின் துவக்க விழா, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.இதில், பொதுமக்கள், பயணிகள், டிரைவர்கள் உள்ளிட்டோருக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சிவக்குமார், சரவணன், நித்யா, புதுச்சத்திரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், எஸ்.ஐ., நேரு, ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ் கண்ணன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி