உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய கட்டடம் கட்ட ஆன்லைனில் அனுமதி

புதிய கட்டடம் கட்ட ஆன்லைனில் அனுமதி

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்கள், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜசேகர் வெளியிட்ட அறிக்கை:மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 15 வார்டுகளில் புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உரிய அனுமதிபெற்று கட்டடம் கட்ட வேண்டும். உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டடம் கட்டும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டடம் கட்டும் உரிமை பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி