உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை அமல்: வக்கீல் சங்கம் முழு ஆதரவு

புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை அமல்: வக்கீல் சங்கம் முழு ஆதரவு

நாமக்கல், நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின், 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாமக்கல்லில் நடந்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அகில பாரத வக்கீல்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாஸ்கர் தலைமை வகிததார். நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். நாமக்கல் மூத்த வக்கீல் சீனிவாசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சங்க பொதுச்செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். தென்மண்டல பொதுச்செயலாளர் கேசவன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிக்குமார் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர்.கூட்டத்தில், மத்திய அரசு நாளை முதல், இந்தியாவில் புதிதாக, 3 கிரிமினல் சட்டங்களை அமல்படுத்துகிறது. இதனை, பாரதிய நியாய சங்கிதா, பாரதிய சாக்ஷியா அபிநயம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கிதா ஆகிய, 3 சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அரசு, வக்கீல்களின் சேமநல நிதியை, 50,000 ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மலைவாழ் மக்களின் பாதுகாப்பு சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை