மேலும் செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
20-Sep-2025
நாமக்கல் :நாமக்கல், கடைவீதியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு புதிதாக, 10 அடி உயரத்தில் மரத்தால் ஆன தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி மடத்தில் இருந்து இந்த வெள்ளோட்டம் தொடங்கியது. இதையொட்டி, கந்துமுத்துசாமி தெரு, நந்தவனதெரு, பிரதான சாலை, பரமத்திசாலை, கோட்டை சாலை வழியாக பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.பின், கன்னிகா பரமேஸ்வரி மடத்தில் முடிவடைந்தது. வெள்ளோட்டம் சென்ற தேருக்கு முன்பாக பெண்கள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
20-Sep-2025