15ல் முதல்வர் ஸ்டாலின் வருகை உற்சாக வரவேற்பளிக்க தீர்மானம்
நாமக்கல்: கிழக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், நேற்று நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்த-லைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராம-லிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் கலந்து-கொண்டு பேசினார். தொடர்ந்து, வரும், 15ல், நாமக்கல் மாநகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்-திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு வருகை தரும், முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிப்பது.நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., பெயரில் தேசிய மயமாக்கப்-பட்ட வங்கி கிளையில் கணக்கு தொடங்குவது, இந்த கணக்கை மாவட்ட செயலாளர், பொருளாளர் ஆகியோர் இயக்குவது என்றும், அதே நேரத்தில், மாவட்ட செயலாளர், பொருளாளர் மாற்றப்பட்டால், அதை தக்க ஆதாரத்தோடு அவ்வப்போது வங்-கிக்கு தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேயர் கலாநிதி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்-கோவன், நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார், சங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், பொதுக்குழு உறுப்பினர் விமலா சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.