உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்று இடைத்தேர்தல் சம்பளத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

இன்று இடைத்தேர்தல் சம்பளத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, இடைத் தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம், நாமக்கல்லில் பணிபுரிந்து வரும் விக்கிரவாண்டி சட்ட சபை தொகுதிக்குட்பட்ட தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும், 100 சதவீதம் ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும், தேர்தல் நாளுக்கான ஊதியமானது, வழக்கமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியமாகவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும். அவ்வாறு, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி