உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையம், மே 29- பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இப்பகுதியில் மீண்டும் விபத்து நடந்தது. இதில் ஒருவர் பலியா

பள்ளிப்பாளையம், மே 29- பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இப்பகுதியில் மீண்டும் விபத்து நடந்தது. இதில் ஒருவர் பலியா

நாமக்கல் : ''ஓட்டு எண்ணிக்கையின் போது, முகவர்கள் மொபைல் போன், ஐபேட், லேப்டாப், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த அனுமதியில்லை,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா கூறினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம், சட்டசபை தொகுதி வாரியாக, வரும், 4ல் காலை, 8:00 மணி முதல், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தபால் ஓட்டுகள் எண்ணிக்கை துவங்கப்பட்டு பின், 30 நிமிடம் கழித்து, காலை, 8:30 மணி முதல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட ஓட்டுகள் எண்ணப்படும்.மின்னணு முறையில் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் வரும், 4 காலை, 8:00 மணிக்கு முன் பெறப்படும் தபால் ஓட்டுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணும் அறையில், ஒரு மேசைக்கு, ஒரு முகவர் என்ற அடிப்படையில், 14 முகவர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு, ஒரு முகவர் என்ற அடிப்படையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 15 முகவர்களை, ஒரு வேட்பாளர் நியமனம் செய்யலாம்.தபால் ஓட்டுச்சீட்டு எண்ணும் அறையில், ஒரு மேசைக்கு, ஒரு முகவர் என்ற அடிப்படையில், 7 முகவர்களும், தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு, ஒரு முகவர் என்ற அடிப்படையில், 8 முகவர்களை, ஒரு வேட்பாளர் நியமனம் செய்யலாம். போட்டியிடும் வேட்பாளர் ஓட்டு எண்ணும் இட முகவர்கள் பட்டியலை, ஓட்டு எண்ணுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட, வரும், 4க்கு மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது, முகவர்கள் மொபைல் போன், ஐபேட், லேப்டாப், கால்குலேட்டர் போன்ற மின்னணு கருவிகளை கொண்டு செல்ல அனுமதியில்லை. அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை சுமுகமாக நடக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி