எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், முட்டாஞ்செட்டி பஞ்., தலைவராக கமலபிரியாவும், துணைத்தலைவராக சபாரத்தினமும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடால், பஞ்., நிர்வாகம் கடந்த, 3 ஆண்டுக்கும் மேலாக முடங்கி கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன், கலெக்டர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்.அப்போது, பஞ்., தலைவர் கமலபிரியாவின், 'செக்' பவரை முன்னாள் கலெக்டர் பறித்தார். அந்த காலங்களில் துணைத்தலைவர் சபாரத்தினம், பி.டி.ஓ., பிரபாகரன் ஆகியோர் குடிநீர் குழாய்கள், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து பஞ்., சார்பில் லட்சக்கணக்கில் பொருள்கள் வாங்கி உள்ளனர்.இந்நிலையில், பஞ்., தலைவருக்கு, 'செக்' பவர் மீண்டும் வந்ததும், முன்பு வாங்கிய பொருட்களுக்கு தலைவர் பணம் கொடுக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று துணைத்தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், பி.டி.ஓ., அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.