மேலும் செய்திகள்
குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்
22-Sep-2024
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றை மூடுவதாக அறிவித்ததால், பெற்றோர், மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குமாரபாளையம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியை, நிர்வாக காரணத்தால் அடுத்தாண்டு மே மாதத்துடன் மூடப்படும் என, சுற்றறிக்கை ஒட்டியதால், பள்ளி மாணவியர், பெற்றோர் குமாரபாளையம் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், வருவாய்த்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் பேசி முடிவு காணப்படும் என, தெரிவித்ததால், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22-Sep-2024