உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கபிலர்மலையில் உள்ள கிராம சந்தையை, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த மார்ச், 15ல் திறப்பு விழா நடந்தது. தற்போது, வாரச்சந்தை மற்றும் புதிதாக கட்டப்பட்ட, ஆறு கடைகளை, கபிலர்மலை பஞ்., யூனியன் சார்பில் ஏலம் விட கவுன்சிலர்கள் மன்ற கூட்டம், நேற்று நடந்தது. கபிலர்மலை யூனியன் சேர்மன் ரவி, பி.டி.ஓ., ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வாரச்சந்தை மற்றும் புதிதாக கட்டப்பட்ட, ஆறு கடைகளுக்கு ஏலம் விட தீர்மானம் கொண்டு வருவதையறிந்த, கபிலக்குறிச்சி பஞ்., தலைவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வடிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பி.டி.ஓ., அலுவகத்தை முற்றுகையிட்டு, கபிலர்மலை வாரச்சந்தையும், புதிதாக கட்டப்பட்ட, ஆறு கடைகளும், கபிலக்குறிச்சி கிராம பஞ்.,ல் ஒப்படைக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்தனர். மற்றொரு தரப்பினர், 'கபிலர்மலை யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு, யூனியன் மூலமே ஏலம் விட வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இரு தரப்பையும் சமாதானம் செய்த, பி.டி.ஓ., ராஜேந்திரபிரசாத், 'தற்போது இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:புதிதாக கட்டப்பட்டுள்ள, ஆறு கடைகளுக்கு கபிலர்மலை யூனியன் மூலமாக ஏலம் விடப்பட்டால், நியாயமான முறையில் அரசுக்கு வருவாய் கிட்டும். கபிலக்குறிச்சி பஞ்., சார்பில் ஏலம் விடப்பட்டால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. கடந்த, கபிலர்மலை தேர் திருவிழாவில் டெண்டர் விடப்பட்ட போது, முறைகேடு நடந்தது போல், இதில் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளே சந்தை, கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை