உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

ராசிபுரம்,:ராசிபுரம் பகுதியில், கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.ராசிபுரம், வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்கள் மட்டுமின்றி, ராசிபுரம் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நீர்தேக்க தொட்டி கட்டும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. தற்போது, பெரிய நகரங்களுக்கு சிமென்ட் குழாய் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. ராசிபுரத்தில் இருந்து நாமகிரிப்பேட்டைக்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் குழி பறித்து, கிரேன் மூலம் குழாய் பதித்து வருகின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கின்றனர். காலை, மாலை நேரங்களில் கல்லுாரி, பள்ளி வாகனங்கள் அதிகளவு வருவதால், ஆத்துார் பிரதான சாலையில் இப்பிரச்னை அதிகரித்து வருகிறது. அதேபோல், கிராமங்களிலும் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், சாலைகள் ஆங்காங்கே பறிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். மங்களபுரம், காட்டூர், நாவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இப்பணியை வேகமாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை