உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்ஸ்டாகிராமில் காதலனுடன் பேச்சு கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி விபரீதம்

இன்ஸ்டாகிராமில் காதலனுடன் பேச்சு கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி விபரீதம்

மோகனுார்: 'இன்ஸ்டா'வில் காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த லத்து-வாடியை சேர்ந்தவர், 16 வயது பிளஸ் 1 மாணவி. இவரது பெற்றோர் கருத்துவேறுபாடு காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வாழ்ந்து வரு-கின்றனர். இதில் சிறுமி, சென்னையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். அங்கு, வாலிபர் ஒருவரை சிறுமி காதலித்து வந்-துள்ளார். இதனால், சிறுமியை மோகனுார் அழைத்து வந்து, அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்த்தனர்.இந்நிலையில், சிறுமி, இன்ஸ்டாகிராமில் காத-லுனுடன் பேசி வந்துள்ளார். இதையறிந்த பாட்டி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிறுமி, நேற்று காலை, 7:30 மணிக்கு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த பாட்டி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிறுமி துாக்கில் தொங்கி கொண்டி-ருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ-தனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்