உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கலை கல்லுாரியில் மாசு கட்டுப்பாட்டு தின விழா

அரசு கலை கல்லுாரியில் மாசு கட்டுப்பாட்டு தின விழா

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், யூத் ரெட் கிராஸ் சார்பில், தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலக உதவி மேலாளர் வித்யா பங்கேற்றார். அவர், ''மாணவ, மாணவியர் தாங்கள் வசிக்கும் இடங்களை துாய்மையாக வைத்துக்கொண்டால் நோய் நொடியின்றி வாழலாம்,'' என அறிவுறுத்தினார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க துண்டு பிரசுரம், மஞ்சள் பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லுாரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண்பிரகாஷ், நாட்டு நலப்பணி திட்டஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி