உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் 5.41 லட்சம் பேருக்கு ரூ.60.07 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு

மாவட்டத்தில் 5.41 லட்சம் பேருக்கு ரூ.60.07 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு

நாமக்கல்: ''மாவட்டத்தில், 5.41 லட்சம் கார்டுதாரர்களுக்கு, 60.07 கோடி ரூபாய் மதிப்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது,'' என, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.தமிழக அரசு உத்தரவுப்படி, இந்தாண்டு பொங்கல் பரிசாக, அரிசி வாங்கும் தகுதியுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகரில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், 5 லட்சத்து, 41,813 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில், 8 தாலுகாக்களில் உள்ள, 945 ரேஷன் கடை மூலம், இந்த பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், தகுதியுள்ள, 4 லட்சத்து, 7,022 பேருக்கு விலையில்லா சேலை, 3 லட்சத்து, 93,241 பேருக்கு, இலவச வேட்டி, பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பு, 60 கோடியே, 7 லட்சம் ரூபாய்.இவ்வாறு அவர் பேசினார்.ஆர்.டி.ஓ., சரவணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, அரசுத்துறை அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி