உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் 23ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 23ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் வரும், 23ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.இது குறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும், 23 மாலை, 4:00 மணிக்கு நாமக்கல் திருச்சி ரோட்டில், ரவி பிளாசா கட்டடத்தில் அமைந்துள்ள, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அஞ்சல்துறை சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருப்பின், தங்களது புகார்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்--637001 என்ற முகவரிக்கு, வரும், 22ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகார் அனுப்பும் அஞ்சல் உறையின் மீது, அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்பந்தமானது என்று எழுதப்பட வேண்டும்.நேரடியாகவும் வந்து புகார் தெரிவிக்கலாம். புகார் கடிதத்தில் முழு தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் எண், எந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும். புகார்கள் சேமிப்பு கணக்கில் அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் இருப்பின், அதன் அக்கவுன்ட் நம்பர், பிஎல்ஐ, ஆர்பிஎல்ஐ பாலிசி நம்பர், முகவரி மற்றும் எந்த ஆபீசில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய முழு விபரங்களை குறிப்பிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி