உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்

பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்

ப.வேலுார் : ப.வேலுார் அருகே, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, நேற்று நடந்தது. முன்னதாக கடந்த, 11ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை, 5:30 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தலைமை வகித்து, தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.இன்று பல்லக்கு உற்சவமும், மாலை, 3:00 மணிக்கு வராஹ புஷ்கரணியில் தீர்த்தவாரி சக்கரா ஸ்நானமும், இரவு, கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் ஜனனி, தக்கார் வினோதினி, பாண்டமங்கலம் டவுன் பஞ்., தலைவர் சோமசேகர், விழாக்குழு தலைவர் முருகவேல் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., ராஜி தலைமையில், ப.வேலுார் டி.எஸ்.பி., ராஜமுரளி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ