உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை: 30க்குள் விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை: 30க்குள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் : 'முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், முதிர்வுத்தொகை பெற, வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், 1992 முதல், 1,500- மற்றும், 15,200 ரூபாய் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், முதிர்வுத்தொகை பெற விண்ணப்பம் செய்யும் வகையில், நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, வரும், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில், 1,500 மற்றும் 15,200 ரூபாய் வைப்புத்தொகை பத்திரம் அசல், நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில் - தனி வங்கிக்கணக்கு), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்பு சான்றிதழ் நகல், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.விண்ணப்ப ஆவணங்களை, 'மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண். 234, கூடுதல் கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல்-637003, தொலைபேசி எண்: 04286--299460 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை