உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையத்தில் டி.எஸ்.பி., ஆபீஸ் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் டி.எஸ்.பி., ஆபீஸ் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், குமாரபாளையத்தில், டி.எஸ்.பி., அலுவலகத்தை அமைக்க வலியுறுத்தி, அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க., முன்னாள் நகர செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் அதிகம் உள்ள குமாரபாளையம் பகுதியில் மட்டுமே போலீஸ் உட்கோட்டம், அதற்கான தலைமையகம் அமைக்க வேண்டும். தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள பள்ளிபாளையம் பகுதியில் அதனை அமைத்தால், குமாரபாளையத்திலிருந்து அங்கு சென்று வர மக்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்படும்.இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், பள்ளிபாளையத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைப்பதை கைவிட்டு, குமாரபாளையத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், குமாரபாளையத்தை சேர்ந்த அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்