உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழை பெய்ய வேண்டி அங்காளம்மனுக்கு பூஜை

மழை பெய்ய வேண்டி அங்காளம்மனுக்கு பூஜை

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பழையபாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. பிரசித்த பெற்ற இக்கோவிலில், மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும், நேற்று பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மழை வேண்டி குடங்களில் வைக்கப்பட்ட தண்ணீரில் வேப்பிலையை வைத்து அங்காளம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள், பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை