மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
நாமக்கல்: விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:மோகனுாரில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுப்பதற்கு வருவாய்த்துறையினர் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக, 2023 மே, 29ல், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், வருவாய்த்துறையினர் தயார் செய்யப்பட்ட வரைபடங்களையும், அறிக்கைகளையும் காண்பித்தனர். அதில், நீர்நிலைகள் மறைக்கப்பட்டு, விவசாய நிலங்களை தரிசு நிலங்கள் என குறிப்பிட்டிருந்தனர்.அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், புதிதாக வரைபடம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர் போராட்டம் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசவில்லை. அதனால், கலெக்டர் அலுவலகத்தில், இன்று (நேற்று) முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், போலீசார் மறுத்துவிட்டனர். அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து, அனைத்து சங்க நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025