நாமக்கல், 'வரும், 27ல், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும்' என, தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், பங்கேற்று பேசினார்.கூட்டத்தில், வரும், 27ல், தி.மு.க., இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அன்றயை தினம், நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, டவுன் பஞ்.,களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும். 27, 28ல், ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்குதல், 100 இடங்களில் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.