உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் மோதி காவலாளி பலி

கார் மோதி காவலாளி பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கதிராநல்லுார் நத்தம்மேடு எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் பெரியசாமி, 57. இவர் வள்ளிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், காவலாளியாக பணியாற்றி வரு-கிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்ககு, தனக்கு சொந்-தமான, டி.வி.எஸ்., மொபட்டில் பெரியசாமி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை, அக்கம்பக்-கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்-டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ