உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெப்படையில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பால் அதிர்ச்சி

வெப்படையில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பால் அதிர்ச்சி

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை சுற்று வட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ளன. வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் நகரமாக வெப்படை உள்ளதால், வெளியூரில் இருந்தும், வடமாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வெப்படைக்கு வேலை செய்ய வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள், இளைஞர்கள் இடையே போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் கண்காணித்து, கடந்த மார்ச், 8ல் போதை மாத்திரை விற்பனை செய்த, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும், கடந்த, 31ல் கஞ்சா விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த, 3 பேரை கைது செய்தனர்.தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, போதைப்பொருள் விற்பனையை முழுமையாக தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ