உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலாவதி மிட்டாய் விற்ற கடைக்கு Ôரூ.1,000 ÔÔஅபராதம்

காலாவதி மிட்டாய் விற்ற கடைக்கு Ôரூ.1,000 ÔÔஅபராதம்

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டி அரசு பள்ளி முன் உள்ள பெட்டிக்கடைகளில், காலாவதியான மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புகாருக்கு உள்ளான பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது, பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான மிட்டாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான மிட்டாய்கள் விற்பனை செய்த கடைக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி