உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீஸ் ஸ்டேஷனில் தரையில் அமர்ந்து எம்.பி., தர்ணா மணல் கொள்ளையரை கைது செய்யக்கோரி ஆவேசம்

போலீஸ் ஸ்டேஷனில் தரையில் அமர்ந்து எம்.பி., தர்ணா மணல் கொள்ளையரை கைது செய்யக்கோரி ஆவேசம்

ப.வேலுார், மார்ச் 13--காவிரி ஆற்றில் மணல் கடத்துவோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், நாமக்கல்எம்.பி., போராட்டத்தில் ஈடுபட்டார்.நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, நாமக்கல் கொ.ம.தே.க., - எம்.பி., சின்ராஜ் நேற்று காலை, 10:00 மணிக்கு வந்தார். பணியிலிருந்த போலீசாரிடம், ''இன்ஸ்பெக்டர் எங்கே?'' என்று கேட்டுவிட்டு, ஸ்டேஷனுக்குள் தரையில் அமர்ந்தார். 'சேரில் அமருங்கள்' என, போலீசார் கூறியதை பொருட்படுத்தவில்லை.தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ரங்கசாமியிடம், ''அனிச்சம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில், கூலியாட்களை வைத்து மணல் திருட்டு நடக்கிறது. இதில் ஈடுபடுவோரை கைது செய்யும் வரை, இடத்தை விட்டு செல்லமாட்டேன்,'' என, கூறினார். டி.எஸ்.பி., சங்கீதா ''உரிய நடவடிக்கை எடுக்கிறேன்'' என கூறியும் ஏற்க மறுத்தார். ''மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். மணல் திருடிய உரிமையாளர்களை கைது செய்கிறேன்,'' என உத்தரவாதம் அளித்தார். அதன் பிறகே தர்ணா போராட்டத்தை, 12:00 மணிக்கு கைவிட்டார். மணல் திருட்டை தடுக்க கோரி டி.எஸ்.பி., சங்கீதாவிடம் மனுவையும், எம்.பி., அளித்தார். மனுவில் எம்.பி., கூறியிருப்பதாவது:ப.வேலுார் பகுதி காவிரி ஆற்றில் இரவில் மணல் கடத்தல் நடக்கிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்திலும் மணல் அள்ளியுள்ளனர். இந்த சட்ட விரோத செயலில் அனிச்சம்பாளையத்தை சேர்ந்த ராஜா, நன்செய் இடையாறு சேகர் ஈடுபடுகின்றனர். பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கின்றனர். இவர்கள் மீது குண்டா சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை