| ADDED : ஜூன் 17, 2024 01:27 AM
மகளிருக்கு ஹாஸ்டல்அமைக்க இடம் தேர்வுநாமக்கல்: வேலைக்கு செல்லும் மகளிருக்கு, தமிழக அரசு சார்பில் விடுதி அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டார்.'வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுதி வசதி அமைத்து தரப்படும்' என, தமிழக அரசு அறிவித்திருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதியை விரைவாக அமைக்க வேண்டும் என பெண்களுக்கான பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், நாமக்கல்லில் விடுதி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை விரைவுபடுத்தியுள்ளனர்.நாமக்கல் -- திருச்சி ரோட்டில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பணிக்கு செல்லும் மகளிருக்கான விடுதி அமைக்க இடம் ஒதுக்க ஆலோசிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கலெக்டர் உமா, பொதுப்பணித்துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். எனவே, விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக்குள் புகுந்தநாக பாம்பால் பரபரப்புபள்ளிப்பாளையம்,-பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் சாமுவேல், 45. இவரது வீட்டில், நேற்று காலை நாக பாம்பு ஒன்று புகுந்தது. இதையறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் செங்குட்வேலு தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செனறு, நீண்டநேரம் தேடினர். அப்போது, வீட்டுக்குள் பதுங்கியிருந்த, 5 அடி நீளமுள்ள நாக பாம்பை உயிருடன் பிடித்து, காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.